மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகளை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட நிறுவனத்திற்கு படக்குழுவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ஆனால் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்னரே இணையதளத்தில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் இந்த படமானது தங்களுடைய ஒன்றரை வருட உழைப்பு என்பதால் இதன் காட்சிகளை யாரும் வெளியிட கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து படத்தின் முக்கிய காட்சிகள் எவ்வாறு வெளியாயின என்று படக்குழுவினர் விசாரணையில் ஈடுபட்ட போது சென்னையில் உள்ள ஒரு முன்னணி நிறுவனம் படத்தின் முக்கிய காட்சிகளை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் படக்குழுவினர் அந்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளனர். மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்டஅந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீசில் மாஸ்டர் படம் முக்கிய காட்சிகளை சட்டவிரோதமாக பதிவேற்றிய குற்றத்திற்காக 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.