நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாது என்று படத்தின் இயக்குனர் சொன்னதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அவர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகி வெள்ளி விழா காணும் படமாக மாற வேண்டும் என்ற வேண்டுதலுக்காக மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.பின்னர் இதுபற்றி அவர் கூறுகையில் மாஸ்டர் படம் ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும்,தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்று கூறினார். மேலும் மாஸ்டர் பட அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும், திரையரங்கம் தேதி குறிப்பிட்ட பிறகு தயாரிப்பு நிறுவனம் படத்தை எப்போது வெளியிடப்படும் என்ற தேதி அறிவிக்கப்படும். அந்த நாளுக்காக நானும் காத்திருக்கிறேன் என்று இயக்குனர் லோகேஷ் கூறினார்.