தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் தற்போது அதிக அளவிலான எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் மாஸ்டர். இந்த திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியிட இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக திரையிடும் தேதி மாற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆலோசனைக்கு பிறகு தற்போது 2021 பொங்கல் தினத்தன்று திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், ஏப்ரல் 14ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிறிஸ்மஸ் அல்லது புத்தாண்டு தினத்தன்று புதிய அப்டேட் ஒன்று படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியாக வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப் போகும் பட்சத்தில் ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.