சென்னை அண்ணாநகரில் உள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளரை தாக்கி நகை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகர் கிழக்கு சிந்தாமணி அருகே உள்ள ப்ளூ வேல்ஸ் என்ற மசாஜ் மையத்திற்கு நேற்றிரவு இருவர் சென்று மசாஜ் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் நேரமாகிவிட்டதால் மையத்தை மூடப்போவதாக உரிமையாளர் கூறியதையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். ஊழியர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்ற பின், திரும்பி சென்ற அவர்கள் மேலும் 2 நபர்களுடன் மசாஜ் மையத்திற்குள் வந்து மையத்தின் உரிமையாளரை தாக்கினர்.
கைப்பிடி மற்றும் கத்தியை வைத்து பெண்ணின் தலை மற்றும் தோல் பட்டையில் தாக்கி 4 சவரன் நகைகளை பறித்து விட்டு காரில் தப்பிச் சென்றனர். இது குறித்து டி.பி. சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மசாஜ் மையத்தின் அருகிலுள்ள cctv காட்சிகளை ஆய்வு செய்தனர். cctv காட்சியில் தப்பிச் சென்றவர்கள் தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேஷ்,ராகுல், திவாகர், ஜெய்னுலாப்தீன், ஹரிகிருஷ்ணன் அகிய 5 பேர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.