சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு. முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது டாப் ஹீரோவுடன் நடித்து அசத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. முன்னணி நடிகர்களான ரஜினி , அஜித் , விக்ரம் , சூர்யா , தனுஷ் , விஜய் சேதுபதி , சிவகார்த்திகேயன் ஆகியோர் ஹீரோவாக நடித்த படத்திலும் தனக்கான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் இவரின் நகைச்சுவை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.இவர் கடந்த இரண்டு வருடம் பல படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும் இவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தனது ட்வீட்-டர் பக்கத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 40 படங்களில் நடித்தது மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனை என்று கூட சொல்லலாம் . இதனால் யோகி பாபு மகிழ்ச்சியில் உச்சியில் இருந்து வருகின்றார்.
https://twitter.com/yogibabu_offl/status/1235139083749306368