Categories
சினிமா தமிழ் சினிமா

Mass Hero படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் திரையுலகில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவர் பேரைச் சொன்னாலே பெரும் வரவேற்பு உண்டு. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு வடிவேலு நீண்ட நாட்களாக திரையுலகின் வரவில்லை.  பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள வடிவேலுவை பழைய வீடியோக்கள் மூலமும் மீம்ஸ்கள் மூலமும் மட்டுமே கண்டு ரசித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் வைகை புயல் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே ஃபிரண்ட்ஸ், ஆறு, சில்லுனு ஒரு காதல், ஆதவன், வேல் உள்ளிட்ட வெற்றி படங்களில் சூர்யா மற்றும் வடிவேலு இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலு ரீ என்ட்ரி பற்றி அறிந்த அவரின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்துள்ளனர்.

Categories

Tech |