தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று எச்சரித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மே 17ஆம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளான திருமணம், இழப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளும் வெளியேயும் பயணிக்க இ- பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு ,கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெறவேண்டும்.