Categories
உலக செய்திகள்

மாஸ்க் இல்லாமல் போகக்கூடாது… அனுமதிக்க மறுத்த காவலாளியின் நிலை இப்படியா…!!

முக கவசம் இல்லாத மகளை கடைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளியை குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவின் மிச்சிகனில் (Michigan) இருக்கும் ஜெனீசி கவுண்டி என்னும் இடத்தில ஃபேமிலி டாலர் கடை உள்ளது . இந்தக் கடைக்கு வருபவர்கள் நிச்சயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என கடையின் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதே பகுதியில் சேர்ந்த ஷர்மல் டீக்கின் தன் மகளுடன் ஃபேமிலி டாலர் கடைக்கு சென்ற பொழுது கடையின் காவலர் கால்வின் முனெர்லின் (Calvin Munerlyn), டீக்கின் மகளை மாஸ்க் அணியாத காரணத்தினால் அனுமதிக்க முடியாது எனகூறியுள்ளார்.

இதனால், இரண்டு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டீக்கினின் கணவர், மகன் இருவரும் சேர்ந்து மகளை உள்ளே அனுமதிக்குமாறு காவலரிடம் சண்டை போட்டுள்ளனர். வாக்குவாதம் அதிகரிக்க ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த தூப்பாக்கியால் காவலரை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்தது ஷர்மல் டீக், அவரது கணவர் லாரி டீக்(44), ரமோனியா பிஷப்(23) என்பது தெரியவந்ததை தொடர்ந்து மூன்று நபர்கள் மீதும் வழக்கு பதிந்து காவல் துறையினர், ஷர்மல் டீக்கை கைது செய்தனர். மேலும், தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |