Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணிதலில் மாற்றமா…? இது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

முககவசம் அணிதல் தொடர்பான பரிந்துரைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கனடா நாட்டில் குளிர் அதிகமான நிலையில் மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்நிலையில் கனேடிய மருத்துவர்களும், அறிவியலாளர்களும் இதுவரை மக்களிடம் முககவசம் அணியுங்கள் என்று மட்டுமே கூறி வந்த நிலையில் தற்போது நீங்கள் கொரோனாவிடம் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு எந்தவகை மாஸ்க் அணிகிறீர்கள் என்பதை கவனித்து பாருங்கள் என்று கூறுகிறார்கள்.

மேலும் நீங்கள் பயன்படுத்தும் துணியாலான முககவசம் உங்களையும் மற்றவர்களையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கிறதா என்பதை கவனித்து பாருங்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் கனடாவின் பொது சுகாதார அமைப்பு நவம்பர் 12-ம் தேதி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள கொரோனாவை தவிர்ப்பதற்காக முககவசம் அணிதல் குறித்த தகவல்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதில் பொதுவாக சாதாரண முககவசங்கள் கொரோனா பரவலை தடுக்க உதவும் என்றாலும் மருத்துவ மாஸ்குகள் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பரிந்துரை அதிகம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள் மற்றும் தாங்கள் வாழும் சூழலின் அடிப்படையில் கொரோனா தொற்றுடன் தொடர்பு ஏற்படும் அபாயம் இருப்பவர்கள் மருத்துவ மாஸ்குகள் அணியுமாறு கூறுகிறது. இதற்கிடையில் N-95 மற்றும் KN-95 masks என அழைக்கப்படும் Respirator வகை மாஸ்க்குகள் உச்ச பட்ச பாதுகாப்பு அளிக்கக்கூடியவை என கருதப்படுகிறது. இதற்கு முன் அவை நோயாளிகளுடன் தொடர்புகொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |