Categories
உலக செய்திகள்

மர்மக் கதைகளில் புகழ்பெற்ற நாவலர் மேரி ஹிக்கின்ஸ் மரணம்..!!

ஆங்கில மர்மக்கதைகளில் புகழ்பெற்ற நாவலாசிரியரான மேரி ஹிக்கின்ஸ்  புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

ஆங்கில மர்மக் கதைகளில் புகழ்பெற்ற நாவலாசிரியர் மேரி ஹிக்கின்ஸ் கிளார்க். 92 வயதான இவர் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். மேரியின்  மரணச்செய்தியை   அவருடைய பதிப்பாளர்கள், அதிகாரப்பூர்வமாக சைமன் & ஸ்கஸ்டர் டிவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

 

மேரி ஹிக்கின்ஸ் நிறைய மர்மக் கதைகளை எழுதியுள்ளார். இவர் புகழ் மிக்க எழுத்தாளராக விளங்கினார். அவர் எழுதிய பல நாவல்கள் தொலைக்காட்சியில் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் இவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |