Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனை நிரம்பியதால் கொரோனா நோயாளிகள் வெளியேற்றம்…!!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா படுக்கைகள் நிரம்பியதால் சிகிச்சை பெறுபவர்களை வெளியேற்ற முயன்ற போது ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வாட்ஸ்அப் வீடியோ வைரலாகி வருகிறது .

நாகை மாவட்டத்தில் 1150 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறையில் 200 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை வளாகத்தில் இவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் 55 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 200 படுக்கையை கொண்ட இந்த மருத்துவமனையில் 202 பேர் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று வந்த அனைவரும் சீர்காழிக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் 7 நாட்களுக்கு மேல் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வீட்டிலேயே உள்நோயாளிகளாக இருக்கும்படி தெரிவித்து, அவர்களை வெளியேற்ற மருத்துவமனை ஊழியர்கள் முயன்றனர். இதனால் நோயாளிகளுக்கும் மருத்துமனை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் வாட்ஸப்பில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |