Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிக்க முடியாததால் கடும் மன உளைச்சல்… மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு… நாமக்கல்லில் சோகம்….!!

மருத்துவ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் சேலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஷாம் பென்ஜமின்(23). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த ஷாம்  பென்ஜமின் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு அவர் தூங்கச் சென்றுள்ளார்.

ஆனால் நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை  ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது தாயின் சேலையில் ஷாம் பென்ஜமின் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர்  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .

ஆனால் அங்கு ஷாம் பென்ஜமினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஷாம் பென்ஜமின் படிக்க முடியாததால் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் அவர் தற்கொலை செய்யும் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |