பெண்கள் அழகுக்காக கைகளில் வைக்கும் மருதாணியின் சில மருத்துவ பயன்கள் பற்றிய தொகுப்பு.
- தீக்காயத்திற்கு மருதாணியை அரைத்து வைப்பதனால் எரிச்சல் நீங்கும், வலி குறைந்துவிடும், பெரிய அளவில் தழும்புகள் உருவாவதையும் தடுக்கும்.
- மருதாணியை நன்றாக அரைத்து நெற்றியில் தடவிவர கடும் தலைவலியும் காணாமல்பறந்து போகும்.
- தேங்காய் எண்ணெயுடன் சரியான அளவு மருதாணியை சேர்த்து நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வருவதால் தலைமுடி ஆரோக்கியமாக வளரும்.
- மருதாணியை பெண்கள் கைகளில் வைப்பதால் கைகள் மிருதுவாகும், உடலின் சூடு குறையும், மன அழுத்தம் காணாமல் போகும்.
- மருதாணியில் இருந்து எண்ணெய் எடுத்து அதனை தலைக்கு தேய்த்து வருவதால் தலையில் இருக்கும் நரம்புகள் குளிர்ச்சியாகி நிம்மதியான தூக்கத்தை கொடுக்கின்றது.
- மருதாணியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி வருவதனால் கல்லீரல் பித்தப்பையில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறிவிடும்.
- மருதாணியை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்து சீராக இருக்கும். இதயம் தொடர்பான நோய் ஏற்படுவதையும் தடுக்கும்.
- உடலில் ஏதேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் ஏற்பட்டால் மருதாணி எண்ணையை தடவிவர வீக்கம் விரைவில் காணாமல் போகும்.