இரு நாடுகளுக்கு இடையே நடந்த சண்டை முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தாக்குதல் நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாகவே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.இதில் ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகரம் முழுவதும் எங்கள் நாட்டிற்கு சொந்தம் என்று இஸ்ரேலும் கிழக்கு ஜெருசலேம் எங்களுக்கு சொந்தம் என்று பாலஸ்தீனமும் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது .இந்த மோதலில் இஸ்ரேலில் 13 பேரும், பாலஸ்தீனர்கள் 260 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் . இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வெடித்துள்ளது.
இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த சிலர் நெருப்பு பலூன்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்ததால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எரிந்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவத்தினரும் காஸா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் இடத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போர் முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் மோதல் நிலவியதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.