Categories
உலக செய்திகள்

பஞ்சத்தில் தவிக்கும் லெபனா…. மருந்து, உணவுகளை அனுப்பிய அமெரிக்கா …!!

லெபனா நாட்டின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து 154 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்நாட்டு சுங்கத்துறை தலைமை அதிகாரி மற்றும் துறைமுக தலைமை மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து வெடித்து சிதறியது. சுற்று வட்டாரத்தில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி 154 பேர் உயிரிழந்தனர். 5000 பேர் காயமடைந்தனர். 30 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துவிட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பாக சுங்கத்துறை தலைமை அதிகாரி மற்றும் துறைமுக தலைமை மேலாளர் கைது செய்ய பெய்ரூட் நீதிமன்றம் உத்தரவிட்டுயுள்ளது.

இதனிடையே லெபனா நாட்டிற்கு தேவையான உதவிகள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். பெய்ரூட் துறைமுகத்தில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் ஏதும் நெருப்பு  வைக்கவில்லை என்று அஸ்குல்லா தீவிரவாத இயக்கம் கோரியுள்ளது. இதனிடையே லெபனா நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலை ஏற்படும் என்று ஐநா அமைப்பு எச்சரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாடு பெரும் சிக்கலில் இருந்து வருவதாக ஐநா அமைப்பு கூறியுள்ளது.

Categories

Tech |