Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. காவல்துறையினருக்கு இது அவசியம்…. சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கை….!!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு சுகாதாரத்துறை சார்பில் 1000 மருந்து பெட்டகம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தொற்று பாதித்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், மருந்து பெட்டகம், ஜிங்க், மற்றும்  வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனிடேயே வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், சுகாதாரத்துறை சார்பில் கபசுரகுடிநீர் சூரணம், தாளிசாதி சூரணம் மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு, ஆகியவை சேர்த்து 1000 மருந்து பெட்டகம்  வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |