ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள அறிவியலாளர்கள் சிலந்தியின் விஷயத்தில் காணப்படும் மூலக்கூறிலிருந்து மாரடைப்பைத் தடுப்பதற்கான மாற்று மருந்தை உருவாக்கி அதனை பரிசோதனை செய்து வருகிறார்கள்.
பிரேசர் தீவிலுள்ள ஒரு வகையான சிலந்தியின் விஷயத்தில் ஹை 1ஏ என்னும் புரத மூலக்கூறு அமைந்துள்ளது. இந்த புரதத்திலிருந்து மாரடைப்பை தடுப்பதற்கான மாற்று மருந்தை ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் உருவாக்கி அதனை பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இந்த சிலந்தியின் விஷத்திலுள்ள ஹை1ஏ என்னும் புரத மூலக்கூறு மாரடைப்பால் ஏற்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய விளைவுகளை தடுக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த சிலந்தியின் விஷத்திலுள்ள ஹை1ஏ எனப்படும் புரதம் மாரடைப்பால் ஏற்படும் இதய உயிரணுக்களின் இறப்பு விகிதத்தைக் குறைத்து அதன் உயிர் வாழ்வை மேம்படுத்துவதற்கு உதவுகிறது என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள் .