சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு 90 கிட்ஸ் எழுதியுள்ள கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் மாட்டி தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியாரான நித்யானந்தா தலைமறைவாகி இருக்கிறார். அவர் எங்கு உள்ளார் என்ற விபரங்கள் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில், கைலாசா நாட்டைத் தான் உருவாக்கியுள்ளதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கைலாசா வங்கி, கைலாசா நாணயம், கைலாசா பாஸ்போர்ட் என்று அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவ்வபோது சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவுக்கு எழுதப்படும் கடிதங்களுக்கு அவர் பதில் கொடுப்பதும் உண்டு.
அந்த வகையில், கைலாசாவில் உணவகம் தொடங்க வேண்டும் என்று மதுரை ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கொடுத்த கோரிக்கைக்குப் பதில் அளித்த நித்யானந்தா, திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நித்தியானந்தாவிற்கு 90 கிட்ஸ் எழுதியுள்ள ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த கடிதத்தில் தங்களுக்கு கைலாச பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு குறிப்பிட்டிருந்தது.