Categories
தேசிய செய்திகள்

கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னா… ஆனா இப்படி பண்ணுவான்னு தெரியாது… பெண் காவலருக்கு நேர்ந்த கதி…!!!

மும்பையை சேர்ந்த பெண் காவலரை மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மாநிலத்தில் போவாய் பகுதியில் பெண் ஒருவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள அந்தப் பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக அந்த நபர் உறுதியளித்தார். பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்படி இருக்கும்போது அந்த நபர் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு அந்த பெண்களை மிரட்டி வந்துள்ளார். இந்த வீடியோவை வைத்து அவரது நண்பர் இருவரையும் அழைத்து வந்து அவர்களுடனும் உல்லாசமாக இருக்குமாறு அந்த பெண் காவலரை கட்டாய படுத்தியுள்ளார். இந்த கொடுமையை தாங்க முடியாமல் அந்தப் பெண் காவலர் மும்பையில் உள்ள மேக்வாடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |