கணவன் மனைவிக்கு இடையே இல்லறம் இனிதே சிறக்க இருவரும் வெறும் கணவன் மனைவியாக மட்டும் இருந்தால் போதாது. உங்கள் துணைக்கு நல்ல தோழமையாகவும் இருக்க வேண்டியது அவசியம். எப்போது டிவி, பேஸ்புக் ,வாட்ஸ் அப் என மூழ்கி கிடக்காமல், மனைவிக்காக கொஞ்சம் நேரத்தை செலவு செய்யுங்கள், ஒருவர் மீது ஒருவர் அதிக அக்கறை கவனம் செலுத்தி மனம் விட்டு பேசுங்கள்.
இதன் மூலம் ஒருவர் நினைப்பதை வெளியில் சொல்லாமலேயே மற்றொருவரால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ளலாம். உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்துக் கொண்டு அதை செய்யுங்கள். அதாவது சமையலறையில் செய்யும் சிறு சிறு உதவியாக கூட இருக்கலாம். இதெல்லாம் அவர்களின் முகத்தில் புன்னகை தவழ வைக்கும்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து கோவில், சினிமா, பிஜ், மார்கெட் போன்ற இடங்களுக்கு தவறாமல் சென்று வாருங்கள். இதனால் இருவருக்கும் இடையே உள்ள இணைப்பு அதிகரிப்பதோடு, இருவருக்கும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும். எப்போதும் இருவரும் ஒன்றாகவே இணைந்து சாப்பிடுங்கள், நடந்து செல்லும் போது இருவரும் ஒன்றாக கை கோர்த்து செல்லுங்கள், இரவில் தூங்கும் போதும் ஒன்றாக தூங்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள், இருவருக்கும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உங்கள் துணையுடன் இருப்பதற்கான நேரத்தை கண்டிப்பாக ஒதுக்குங்கள்.