விமான நிலையத்தில் மர்ம பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவலின் படி பயணிகள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் டெர்மினல் 2வில் சந்தேகத்திற்குரிய மர்ம பொருள் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் விமான நிலையத்தின் டெர்மினல் 2 பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இருப்பினும் டெர்மினல் 3 மற்றும் 4 வழக்கம் போல் செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த தகவலால் டெர்மினல் 2 பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.