Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னை வெறி பிடித்தவனா மாத்திடாதீங்க”… மேடையில் செருப்பை காட்டிய சீமான்…. பெரும் பரபரப்பு….!!!!

சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சித்தவர்களை சீமான் தனது காலணியை  உயர்த்திக்காட்டி பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்துல் ரவுப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 26-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, மாரிதாஸ் கைது செய்யப்பட்டது குறித்து நான் கூறிய கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருவதாக கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேடையிலேயே சீமான் தனது காலணியை உயர்த்திக் காட்டினார். மேலும் தொடர்ந்து பேசிய சீமான் “நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை வெறி பிடித்தவனாக மாற்றிவிட வேண்டாம் என கூறியுள்ளார். இதனை கேட்டு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |