Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. மூடப்படுகிறதா மெரினா….? ஆணையர் கூறிய தகவல்….!!

தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெரினாவை  மூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். 

கடந்த சில மாதங்களாக நாடு முழுவதிலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கட்டுப்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மெரினாவை மீண்டும் மூடுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியபோது காலையில் நடை பயிற்சி செய்வதற்கு மட்டும் மெரினாவில் மக்கள் அனுமதிக்கப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீன் மார்க்கெட் மற்றும் துறைமுகப் பகுதியில் கூடும்  மக்களை கட்டுப்படுத்துவதற்காக மீன்வளத்துறையினடம் ஆலோசனை நடப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |