கனமழை காரணமாக முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்புத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொட்டபெட்டா-இடுஹட்டி சாலையில் இருந்த ராட்சத மரம் பலத்த மழையால் முறிந்து விழுந்து விட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர் அதன்பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது