வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் 32 பள்ளி குழந்தைகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.
இலங்கை நாட்டில் வலஸ்முல்ல பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று திரும்பிய பள்ளி வேன் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 32 பள்ளி குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.