Categories
தேசிய செய்திகள்

மரண தண்டனை கெடு – உச்சநீதிமன்றத்தில் மனு….!!!

 நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்க பட்ட  நான்கு குற்றவாளிகள் மீண்டும் மேல்முறையீடு, செய்து இருப்பதால், அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மேல்முறையீடுகள் காரணமாக தண்டனை ஒத்திவைக்க படுவதை தவிர்க்க புதிய விதிகளை வகுக்கும்படி,  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்த குற்றவாளிகள் விண்ணப்பிக்க ஏழு நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

என உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளியின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டால் விரைவாக தண்டனையை நிறைவேற்ற மாநில அரசு மற்றும் சிறை அதிகாரிகளும், ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

குற்றவாளிகள் சட்ட உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தபோதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக நீதி கிடைப்பது முக்கியமானது, என்று அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

கொடிய மற்றும் கொடூரமான முறையில் குற்றம் புரிந்தவர்கள் மீது அளவிற்கு அதிகமான கருணை காட்ட முடியாது, என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டல்களை வகுக்குமாறும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடக்கூடாது என்றும் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |