Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் ‘கால்ஸ்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்த ‘கால்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சின்னத்திரை சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா . இவர் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் ‌. மறைந்த நடிகை சித்ராவின் முதல் படமான ‘கால்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது .

Image result for calls tamil movie

அறிமுக இயக்குனர் ஜே.சபரி இயக்கியுள்ள இந்த படத்தில் வினோதினி, தேவதர்ஷினி ,ஸ்ரீரஞ்சனி ,ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘கால்ஸ்’ படம் வருகிற பிப்ரவரி 26-ஆம் தேதி ரிலீசாக உள்ளது . சித்ரா கதாநாயகியாக நடித்த முதல் படம் என்பதால் இந்தப் படத்தைக்  காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .

Categories

Tech |