கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது.
கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கிய காட்சிகள் ட்ரோனில் பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் எவர்சன் நகர் நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தனித் தனித் தீவுகளாக மாறியுள்ளன. இதற்கிடையே சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு மீட்புப்படையினர் குடியிருப்புகளில் சிக்கிக் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.