பிரான்ஸ் நாட்டவர்கள் பலரும் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும், மக்கள் தொகையை கட்டுபடுத்தும் வகையிலும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டவர்கள் பலரும் உலக மக்கள் தொகை 7.8 பில்லியனை கடந்துவிட்ட நிலையில் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 26 வயதான Manon என்பவர் உலகத்தில் உள்ள வளங்களை நாம் அதிகமாக பயன்படுத்திவிட்ட நிலையில் இந்த உலகத்திற்கு இன்னொரு வாடிக்கையாளரை ஏன் கொண்டு வர வேண்டும் என்று தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார்.
அவருடைய மன நிலைமையை கண்ட பலரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தாங்களும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கூட்டத்தினர் தங்களை “green inclinations, no kids” என்பதன் சுருக்கமாக “ginks” அல்லது “childfree” என்று அழைத்துக் கொள்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் பிரான்சில் ஆண்டு ஒன்றுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 40 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதால் புவிவெப்ப மாயமாகும். இதன் காரணமாகவே தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள போவதில்லை என்று பிரான்ஸ் நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.