Categories
டென்னிஸ் விளையாட்டு

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி: நம்பர் 1 வீரர் ‘ஜோகோவிச்’….! அதிர்ச்சி தோல்வி …!!!

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ,3வது சுற்றில்  நோவக் ஜோகோவிச் தோல்வியை  சந்தித்தார்  .

மொனாக்கோவில் மான்ட்கார்லோ  மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று  நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்  ,3வது சுற்று போட்டியில்  செர்பியா நாட்டை  சேர்ந்த நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த  டேனியல் இவான்சி  ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் ஜோகோவிச் 4-6, 5-7  என்ற என்ற நேர் செட் கணக்கில், 33வது இடத்திலுள்ள  டேனியல் இவான்சிடம்  தோல்வியடைந்தார் .

இதனால் கடந்த 10 வருடங்களாக வெற்றியை தன்வசப்படுத்திய நோவக் ஜோகோவிச்க்கு , நேற்றைய  போட்டியில் தோல்வியடைந்து  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அடுத்து நடந்த  மற்றொரு ஆட்டத்தில் ,6வது இடத்திலிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ,15-வது   இடத்திலிருந்த  பெல்ஜியம் நாட்டு வீரரான,  டேவிட் கோபினிடம் 4-6, 6-7 (7-9)  என்ற நேர்செட் கணக்கில்  தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில்  ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் டிமிட்ரோவை ,6-1, 6-1 என்ற நேர்செட்டில் தோற்கடித்தார்  .

Categories

Tech |