Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விரைவில் தயார்…. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்…. கலெக்டரின் ஆய்வு….!!

மனோராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து பணிகளையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரபேந்திரராஜன்பட்டிணத்தில் மனோரா சுற்றுலா தளம் அமைந்திருக்கிறது. இந்த மனோரா சுற்றுலா தளம் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வாட்டர்லு என்ற இடத்தில் தோற்கடித்ததன் நினைவாக ஆங்கிலேயரின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி வெற்றியின் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது. இங்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ளவர்களும் மற்றும் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாளடைவில் சுற்றுலாத்தளமான மனோரா மிகவும் சேதம் அடைந்ததால் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதில் சிறுவர்களுக்கென்று பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் அவை நாளடைவில் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவர் பூங்காவில் 33 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். பின்னர் சுற்றுலா பயணிகளுக்கான படகு நிறுத்துமிடம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்துள்ளார். மேலும் வனத்துறை சார்பாக மனோராவில் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டு வைத்துள்ளார்.

Categories

Tech |