Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிச்சிக்கோ பா…! ” பிரபாகரன் பெயர் விவகாரம்”…பிரசன்னா டுவிட்…!!

துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ள படத்தில் இருந்த பிரபாகரன் பெயர் விவகாரத்தின் தவறான புரிதலுக்கு நடிகர் பிரசன்னா, துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மலையாள முன்னணி ஸ்டார் மம்முட்டி மகன் நடிகர் துல்கர் சல்மான். அவரே தயாரித்து நடித்துள்ள‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படத்தில் எனது உருவத்தை வைத்து கேலி செய்துள்ளதாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்ப்பு நாயாக வரும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர். இந்த பெயருக்கும் மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இப்பட குழுவினரை சமூக வலைத்தளங்களில் பலரும் வன்மையாக திட்டியுள்ளனர். இதை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் டுவிட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியது என்ன.?

“வரனே அவஷ்யமுண்டு என்னும் படத்தில் இடம் பிடித்திருக்கும் பிரபாகரன் நகைச்சுவை காட்சி தமிழ் மக்களை அவமதிப்பது போல் இருப்பதாக என்னிடம் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த காட்சியை படத்தில் வைத்ததில் எவ்விதமான உள்நோக்கமும் இல்லை என்றும் இப்பெயரை கேரளாவில் சகஜமாக எல்லோரும் பயன்படுத்துகின்றனர். நாங்கள் இப்படத்தில்  பயன்படுத்தியிருக்கும் பெயர் யாரையும் குறிப்பிடும் விதமாக வைக்கவில்லை. பலர் இப்படம் முழுவதும் பார்க்காமலேயே வெறுக்கிறார்கள்.

இந்த பிரச்சனையால் என் தந்தையும், மூத்த நடிகர்களையும் சேர்த்து வைத்து பேசாதீர்கள். இந்த பிரச்சனையால் மனம் உடைந்து காயப்பட்டு உள்ளோம் என்று கூறும் தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இப்பொழுதும் கூறுகிறேன் இந்த படத்தில் யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் துல்கர் சல்மான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவரிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டார்.

இது பற்றி நடிகர் பிரசன்னா டுவிட்டரில் கூறியதாவது;

“ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போல்தான், அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது. அன்பானவர்களே… அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்பாதீர்கள், என்று கூறியிருந்தார்.

மேலும், துல்கர் சல்மான் வெளியிட்ட டுவீட்டைக் குறிப்பிட்டு மலையாள திரைப்படங்களைப் பார்க்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. இதனால் தேவையில்லாத அவதூறுக்கும், தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர் என்று பிரசன்னா அதில் தெரிவித்திருந்தார். அவர் பதிவிட்ட இந்த பதிவிற்கு துல்கர் சல்மானும் நன்றி கூறியுள்ளார்.

 

Categories

Tech |