Categories
மாநில செய்திகள்

மாணவிகளை மரணக் குழியில் தள்ளும் செல்போன் பழக்கம்…. பெற்றோர்கள் கண்காணிப்பு அவசியம்….!!!!

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த குற்றங்களை ஒழிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்து வருவது மகளிர் போலீசார் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன்கள் பயன்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் அதிக நேர செல்போனை கையில் வைத்திருக்கும் மாணவர்கள் தேவையில்லாத இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலமாக அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டனர். பின்னர் அவர்கள் மாணவிகளிடம் திருமண ஆசையை வார்த்தையைக் கூறி அந்த மாணவிகளை அழைத்து சென்று திருமணம் செய்வதுடன் மட்டுமில்லாமல் பாலியல் தொந்தரவும் செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன் பிறகு அந்த மாணவிகளை மீது 18 வயதுக்குக் கீழ் இருப்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள். அதனைப் போலவே சுமுகமாக முடித்துக் கொள்ளும் புகார்களும் அதிகம் உள்ளது. அதன்படி போக்சோ பிரிவில் பதிவான வழக்குகள் திருப்பூர் மாநகரில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 20 ஐ தாண்டி வருகிறது. மாணவர்கள் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். அது மட்டும் இல்லாமல் பெற்றோர்களுடன் இருக்கும் போது அழைப்பு வந்தால் மாணவர்கள் செல்போனில் தனியாய் போய் பேசுவது மற்றும் அறையில் இருந்து தனியாக பேசுவதையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பதின்பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் முன் முடிவு எடுக்க முடியாத வயதில் இருக்கும் மாணவிகளுக்கு, நன்றாக பழகும் வாலிபர்களின் பேச்சை நம்பி புகைப்படங்களை பதிவிட்டால் அதை வைத்து தங்களை மிரட்டி அவர்கள் இச்சைக்கு ஆளாவீர்கள். இதேபோன்று தங்களிடம் நடந்துகொள்ளும் வாலிபர்களே உடனே பெற்றோர்களிடம் பிள்ளைகள் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளார். மேலும் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் நேரங்களை செலவிட்டு அவர்களை கண்காணிப்பது மிகவும் அவசியம் என்று கூறுகிறார்.

Categories

Tech |