Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வழிகாட்டு பயிற்சி…. பரிசு பொருட்கள் வழங்கல்…. ஆட்சியரின் செயல்….!!

விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கியுள்ளார்.

இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே போட்டித் தேர்வுகளை எதிர்க்கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும், சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல்கள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும், வேலைவாய்ப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பின்னர் மென்திறன் பயிற்சியாளர் புவனேஸ்வரி மாணவர்களுக்கு தனித்திறனை வளர்த்துக் கொள்வது எப்படி எனவும், மாணவர்கள் பிளஸ் டூ முடித்து அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்தும், போட்டித்தேர்வுகள் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |