இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஆன்லைன் எனபடும் இணைய வழி மூலம் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 17%, தொலைதூர கல்வி முறையில் படிபவர்கள் எண்ணிக்கை 40% அதிகரித்து உள்ளது. ஆன்லைன் கல்வி முறையில் கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி 5 மாநிலங்களும், தொலைதூர கல்வி முறையில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், மேற்கு வங்கம் முன்னிலையில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாடும் முழுவதும் 66 உயர்கல்வி நிறுவனங்களின் 136 இளநிலை படிப்புகளும், 236 முதல்நிலைப் படைப்பில் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படுகின்றன. இதில், இளநிலையில் அதிகபட்சமாக பிபிஏ படிப்பில் 13,764 பேரும், முதல்நிலை எம்.பி.ஏ. படிப்பில் 28,956 பேரும் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் தனியார் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் வெளிநாட்டு கல்வி நிலையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆன்லைன் வழியில் வழங்கும் பிஎச்டி படிப்புகள் செல்லாது என்று யூஜிசி எனப்படும் பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்துள்ளது.
இது குறித்து யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை நேற்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், பிஎச்டி பட்டம் வழங்குவதில் உரிய தரம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் வழிகாட்டுதல் 2016 ஆம் ஆண்டு வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயர்கல்வி நிறுவனங்கள் பி.எச்.டி பட்டங்களை வழங்குவதற்கான யுஜிசி வழிகாட்டுதல் மற்றும் சட்ட திருத்தங்களை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவித்தப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கல்வித்துடன் நிறுவனங்கள் சார்பில் இணையவழி பிஎச்டி படிப்புகள் வழங்கப்படுவதாக வெளிவரும் விளம்பரங்களை கண்டு மாணவர்களும் பொதுமக்களும் ஏமாற வேண்டாம். அவ்வாறு இணையவழியில் வழங்கப்படும் பிஎச்டி படிப்புகள் யூஜிசி-யால் அங்கீகரிக்கப்படாது. பிஎச்.டி படிப்பில் சேர்வதற்கு முன்பாக அதன் நம்பக தன்மையை மாணவர்கள் முழுமையாக ஆய்வு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.