தமிழகத்தின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது .அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன . இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வளர்ச்சி துறை வெளியிடட்டுள்ள அறிவிப்பில், தேசத்தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடைபெற உள்ளது. மேலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும் இடத்தை அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அறிவிப்பார். அதன்படி பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணிக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நண்பகல் 2 மணிக்கும் போட்டி நடைபெறும்.
மேலும் போட்டி நாளன்று தலைப்புகள் வழங்கப்படும்.இந்த போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000,மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.மேலும் அரசு பள்ளி மாணவர்கள் மாவட்டத்திற்கு இருவரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இப்போட்டிகள் மாணவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.