Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடைசி பஸ் போயிடுச்சு…. தேர்வு எழுத போன மாணவன்…. கலெக்டரின் செயல்….!!

தேர்வு எழுத செல்லும் மாணவன் கடைசி பேருந்தை விட்டதால் கலெக்டர் காரில் அழைத்து சென்றுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வு மையங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 900 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் 834 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதமிருக்கும் 60 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதன்பின் வேட்டவலம் பகுதியில் வசிக்கும் மாணவர் வேடியப்பன் தேர்வுக்காக வந்த நிலையில் கடைசிப் பேருந்தை தவறவிட்டு நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கலெக்டர் அந்த மாணவனை தனது காரில் அழைத்து சென்று தேர்வு எழுத அனுப்பி வைத்துள்ளார்.

Categories

Tech |