மனமுடைந்து காணப்பட்ட வாலிபர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அத்திவெட்டி தெற்கு தெருவில் வைத்திலிங்கம் மகன் ஆதிராஜன் வசித்து வந்தார். இவர் சிங்கப்பூரில் பணி செய்துகொண்டே படித்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரான அத்திவெட்டிக்கு ஆதிராஜன் வந்துள்ளார். அப்போது ஆதிராஜன் கடந்த சில தினங்களாகவே மனமுடைந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆதிராஜன் திடீரென்று எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆதிராஜனை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக ஆதிராஜன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் ஆதிராஜன் திருச்சி கே.எம்.சி.யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.