Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் சென்ற லாரிகள்…. சோதனையில் சிக்கிய ஓட்டுனர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி 3 டிப்பர் லாரிகளில் மணல் கடத்தி வந்த 3 ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கூட்டு ரோடு பகுதியில் வருவாய்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்ததில் பாலமதி பகுதியில் இருந்து அனுமதி இன்றி மணல் ஏற்றிக் கொண்டு வந்தது வருவாய் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரிகளை ஓட்டி வந்த பூபதி, சுப்பிரமணி, வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |