Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்த துக்கம் …. இறப்பிலும் இணைபிரியா தம்பதி …. சோகத்தில் குடும்பத்தினர் ….!!!

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மயிலாடுதுறை மாவட்டம் திருவாடுதுறை ஊராட்சியில் டி.மேலக்கடை முடுக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும் ,                          2 மகன்களும்  உள்ளனர் . இந்த வயதான தம்பதிக்கு திருமணமாகி 60 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த வயதான தம்பதிகள்  மூத்த மகன் செழியன் பாதுகாப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று உடல் நலக் குறைவு காரணமாக மனைவி மாரியம்மாள் உயிரிழந்தார்.

இதனால் மனைவி பிரிந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் கலியபெருமாளும்  அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து இறந்தார்.இதையடுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து இறந்த தம்பதிக்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து  இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |