சுவிட்சர்லாந்தில் ஒரு நிறுவனத்தின் மேலாளர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள Vaud என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேலாளர் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் அறிவிப்பு பலகையிலும் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்.
அதாவது, சர்வாதிகாரத்திற்கு ஒத்துழைக்காமல், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை செய்ததாக கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு, பற்றி அறிந்த நிறுவனத்தின் தலைவர், உடனடியாக அவரை மேலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.