மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்திருக்கிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணத்தினால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.