Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பாலீஷ் தான் போட சொன்னேன்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பாலீஷ் போடுவதற்காக கொடுத்த நகையுடன் ஊழியர் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. இந்த கடையில் 15 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வினோத்குமார் கடையில் வேலை பார்க்கும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரம்ஜான் அலி என்பவரிடம் 600 கிராம் தங்க நகையை கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த தங்க நகையை பாலீஷ் செய்து வருமாறு ரம்ஜான் அலியிடம் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாலீஷ் செய்வதற்காக அறைக்கு சென்ற ரம்ஜான் அலி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் வினோத்குமார் அங்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அந்த அறையில் ரம்ஜான் அலி இல்லை. இதனை அடுத்து ரம்ஜான் அலி 150 கிராம் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து சென்றது வினோத்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ரம்ஜான் அலியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |