காணாமல் போன நபரை கிணற்றிலிருந்து பிணமாக மீட்டெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விமலாராணி என்ற மனைவி இருக்கின்றார். மேலும் கூலி தொழிலாளியான சுரேஷிற்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென காணாமல் போன சுரேஷை அவரது உறவினர்கள் வெவ்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று காலையில் உடன்குடி சாலை ஓரத்தில் இருக்கும் மதுபான கடைக்கு எதிரே அமைந்துள்ள கிணற்றில் சுரேஷ் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்தஅறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை மீட்டுள்ளனர். இதுகுறித்து சுரேஷின் மனைவியான விமலாராணி திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.