Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதை வீட்டில் வைக்காதிங்க…. கண்டுபிடித்த வனத்துறையினர்…. 20 ஆயிரம் ரூபாய் அபராதம்….!!

சித்தேரி மலைப்பகுதியில் மான் தோலை பதுக்கி வைத்திருந்தவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலைப்பகுதியில் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் வனவர் சாத்தப்பன் மற்றும் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிச்சை என்பவரது மாட்டுக் கொட்டகையில் மான்தோல் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் பிச்சையின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் மான்தோல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் பிச்சையனை விசாரணை நடத்தியதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மானை வேட்டையாடி தோலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிச்சையனை வனத்துறையினர் கைது செய்து வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்படி அவருக்கு  20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |