கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திடீரென பிரேம்குமார் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தார் ராமநாதபுரம் காவல் துறையினர் பிரேம்குமார் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.