Categories
தேசிய செய்திகள்

மூதாட்டி சுட்டுக் கொலை… காப்பாற்ற கதறியும் வீடியோ எடுத்த துயரம் …!!

பட்டப்பகலில் மூதாட்டியை மர்மநபர் சுட்டு கொலை செய்த பொழுது  காப்பாற்றாமல்  வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்திரப்பிரதேசம் கஞ்ச் மாவட்டத்தில் தெரு ஒன்றில் வைத்து 60 வயது பாட்டியை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் மிரட்டி உள்ளார். இதனையடுத்து சுற்றி இருந்தவர்களிடம் பாட்டி உதவி கேட்டும் கதறி அழுதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதனால் பயந்து போய் வீட்டிற்குள் ஓட முயற்சிக்க பாட்டியை தொடர்ந்த மர்ம நபர் இரண்டு முறை  துப்பாக்கியால் சுட்டதில் சுருண்டு விழுந்த பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மர்ம நபர் பாட்டியை சுடுவதை பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் தனது மொபைலில் வீடியோவாக பதிந்து வெளியிட்டுள்ளார். வீடியோவின் மூலம் கொலை செய்த குற்றவாளி மோனு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். உயிரை காப்பாற்ற சொல்லி உதவி கேட்ட பாட்டிக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர் சூடுபட்டு இறப்பதை எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |