மருத்துவரை கொடூரமாக கொன்று விட்டு நீதிபதி முன்னிலையில் குற்றவாளி உடல்நிலை சரியில்லை எனக் கூறி சிரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கனடாவில் red deer நகரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்ற Mabiour என்ற நபர் Walter என்ற மருத்துவரை மிகவும் கொடூரமாக சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து Mabiour -ரை கைது செய்து தொலைபேசி வாயிலாக நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி Mabiour-ரிடம் தான் சொல்வதை புரிந்து கொள்ள முடிகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு Mabiour எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனது உடல் சரியானதும் அனைத்துமே எனக்கு ஞாபகம் வந்துவிடும் என கூறியுள்ளார்.
மீண்டும் நீதிபதி Mabiour-ரிடம் அழுத்தமாக கேட்க எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் மருத்துவரை பார்க்க வேண்டும். எதுவும் எனக்கு நினைவில் இல்லை என கூறியதோடு நீதிபதி முன்னிலையில் வாய்விட்டு சிரித்துள்ளார். நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் அவரிடம் கேள்வி கேட்க அவரோ மறுபடியும் சொன்ன பதிலையே சொல்லியிருக்கிறார். எனவே வழக்கை நீதிபதி செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததோடு அவருக்காக வாதாட வக்கீல் ஏற்பாடு செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளார்.