Categories
உலக செய்திகள்

முன்னாள் மனைவியை பையில் அடைத்து வைத்து காட்டுக்குள் கொண்டு சென்ற கணவன்… பின் அவர் செய்த செயல்..!!

கத்தி கத்திமுனையில் தனது முன்னாள் மனைவியை பையில் அடைத்து கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த யாரோஸ்லவ் என்பவர் திடீரென தனது முன்னாள் மனைவி எலேனா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து தோழியுடன் இருந்த எலேனாவை கத்திமுனையில் கட்டிப் போட்டுள்ளார். பின்னர் அவர் எலேனாவை ஒரு ஹாக்கி பைக்குள் அடைத்து அதனை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். நதி ஒன்றிற்கு சென்ற யாரோஸ்லவ் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகில் தனது முன்னாள் மனைவியை ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பைக்குள் இருந்த எலேனா தன்னை யாரோஸ்லவ் கொலை செய்து விடுவார் என மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளார்.

காரணம் சில தினங்களுக்கு முன்பு தான் யாரோஸ்லவ் நான் மெதுவாக கொள்வேன் என மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால் காட்டுக்குள் சென்றதும் பையைத் திறந்த யாரோஸ்லவ் தனது முன்னாள் மனைவிக்கு பூங்கொத்து ஒன்றை கொடுத்தார். அதற்குள் அவர் எலேனாவை பையில் அடைத்து காரில் ஏற்றும் காட்சிகள் சிசிடிவியில் பதிவானதைத்தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்து வந்த போலீசார் அங்கு வர யாரோஸ்லவ் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டு நான்கரை வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எலேனா யாரோஸ்லவ் சிறையில் இருந்து வெளியில் வந்தால் தனக்கு என்ன ஆகும் என்ற பயத்திலேயே இருந்து வருகிறார்.

Categories

Tech |