எகிப்தில் ஒரு நபர் காஸ் குக்கரில் பணத்தை மறைந்து வைத்திருந்த நிலையில் அவரின் மனைவி தெரியாமல் குக்கரை ஆன் செய்ததால், ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தை சேர்ந்த கரேம் என்ற நபர், காஸ் குக்கரில் ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்திருக்கிறார். இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன், அவரின் மனைவி தெரியாமல் குக்கரை ஆன் செய்திருக்கிறார். குக்கரில் இருந்த ரூபாய் நோட்டுகள் மொத்தமாக எரிந்து போனது. சேதமடைந்த ரூபாய் 4,20,000 எகிப்திய பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
குக்கரை மனைவி ஆன் செய்தபோது, பணம் எரிந்தவுடன், வித்தியாசமான வாசனை வந்ததாக கரேம் கூறியிருக்கிறார். அந்த பணம், அல் பெஹெய்ராவின் நைல் டெல்டா கவர்னரேட்டில் இருக்கும், 30 வயது நண்பரால் திட்டமிடப்பட்ட வணிகத்திற்குரிய சேமிப்பு பணம் என்று கூறப்பட்டிருக்கிறது.